நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். கார்த்தியின் 27வது படமான இந்த படத்தை சூர்யா, ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இதனை இசை வெளியீட்டு விழா நேற்று இரவு கோவையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி இந்த நிகழ்ச்சியில் பேசும்போது எனது வேர்கள், உறவுகள், கோவையில் தான் உள்ளது. 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம், 6 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கியுள்ளார்.
மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். நானும், அரவிந்த்சுவாமியும் படம் முழுக்க வருவோம். இப்படம், 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. எமோஷனலாக இருக்கும் என்றார்.