கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி இ. ஆ. ப. , அவர்கள், இன்று துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அங்கத்குமார் ஜெயின், உதவி ஆணையர் திரு. செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் திரு. குணசேகரன், உதவி பொறியாளர் திரு. கமலக்கண்ணன், சோசியோ போடென்ட்ஸ் நிறுவனர் திரு. சத்தியபிரசாந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.