அரசுப் பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு குறித்து முதலமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துக்கள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். பல விழாக்களில் கல்வியில் உன்னதத்தையும், அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி” என கூறியுள்ளார்.