கிணத்துக்கடவு: விபத்துக்கு காரணமான மரங்கள் வெட்டி அகற்றம்
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் கடந்த மாதம், அலங்கார கொண்டை மரக்கிளை விழுந்து மூவர் மீது விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்ததும், ஒருவர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வருவாய்த் துறையின் அனுமதியுடன், நேற்று முதல் கட்டமாக 4 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ரோட்டோரத்தில் உள்ள அனைத்து இடையூறான மரங்களும் விரைவில் வெட்டி அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, ஊராட்சி பகுதியில் புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர்.