அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சாலையில் அமர்ந்து போராடியவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.