புதிய ஆண்டு பிறப்பை வரவேற்கும் விதமாக கோவை மாநகரம் இன்று உற்சாகத்தில் மூழ்கியது. 2024-ஐ விடை கொடுத்து 2025-ஐ வரவேற்கும் விழா, கோவையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெற்றது. தனியார் வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவர் வண்ண விளக்குகளால் மின்னியது. 2024க்கு விடை கொடுத்து 2025 வண்ண விளக்குகளால் மீடியா டவர் வரவேற்றது. அப்பொழுது அங்கு கூடியிருந்தவர்கள் பலூன்களை பறக்கவிட்டு உற்சாகமடைந்தனர். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பாட்டு, நடனம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.