திருமலை நாயக்கன்பாளையம்: கோவிலில் உள்ளிருப்பு போராட்டம்!

78பார்த்தது
கோவை வடக்கு கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திருமலை நாயக்கன்பாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஊர் பொதுமக்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டாட்சியர் 5 பரம்பரை அர்ச்சகர்களை பணியிலிருந்து நீக்கி புதிய அர்ச்சகர்களை நியமிக்க முயற்சித்ததை எதிர்த்து, ஊர் பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் கோட்டாட்சியர் உத்தரவை இடைக்காலமாக தடை செய்தது. இருப்பினும், கோட்டாட்சியர் உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி, கோவில் பொதுமக்கள் கோவிலுக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரம்பரை அர்ச்சகர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பரை அர்ச்சகர்களை பணியில் அமர்த்தும் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி