அண்ணா பல்கலை., விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரையோ காப்பாற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களுடன் திமுக-வினருக்கு தொடர்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.