கோயம்புத்தூர் - Coimbatore

ஆர்.எஸ் புரம்: ஆயுத பூஜையொட்டி பூக்களின் விலை உயர்வு

ஆர்.எஸ் புரம்: ஆயுத பூஜையொட்டி பூக்களின் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரையும், மல்லி பூ கிலோ ரூ. 800 முதல் ரூ. 1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ. 700 முதல் ரூ. 800 வரையும், அரளி பூ கிலோ ரூ. 400, கோழி கொண்டை பூ கிலோ ரூ. 120 முதல் ரூ. 160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரையும் விற்பனையாகி வருகிறது. பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ. 30, கரும்பு ஜோடி ரூ. 150, மா இலை ரூ. 30, பூசணிக்காய் கிலோ ரூ. 40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்