உப்பிலிபாளையம்: கேஸ் லாரி ஓட்டுனர் கைது

68பார்த்தது
கேரளாவிலிருந்து கோவை நோக்கி வந்த கேஸ் டேங்கர் லாரி நேற்று அதிகாலை உக்கடம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. டேங்கர் லாரியின் முன்பகுதியையும் டேங்கரையும் இணைக்கும் இரும்பு ஆச்சு திடீரென உடைந்ததால், டேங்கர் மட்டும் கழன்று சாலையில் விழுந்தது. 

டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால், தீயணைப்புத்துறையினர் மற்றும் கேஸ் நிறுவன ஊழியர்கள் 4 மணி நேரம் போராடி கசிவை கட்டுப்படுத்தினர். கேஸ் வாசனை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பின், கிரேன்களின் உதவியுடன் டேங்கர் மீட்கப்பட்டது. டேங்கர் லாரியை ஓட்டி வந்த ராதாகிருஷ்ணன் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டார். கேஸ் கசிவின்போது தீப்பொறி அல்லது செல்போன் கதிர்வீச்சு ஏற்பட்டிருந்தால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. 

ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. கவிழ்ந்த டேங்கரை பலத்த பாதுகாப்புடன் பீளமேடு பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் துணைக்கு வந்தன. இந்த சம்பவத்தால் மக்கள் பல மணி நேரம் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால், விபத்து பெரிதாகாமல் போனதால் இப்போது நிம்மதி அடைந்துள்ள

தொடர்புடைய செய்தி