சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (டிச.05) பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டு - கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நாளை மட்டும் அவ்வழிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.