கோயம்புத்தூர் - Coimbatore

வெள்ளலூர்: போலி நியமன ஆணை கொடுத்து மோசடி

வெள்ளலூர்: போலி நியமன ஆணை கொடுத்து மோசடி

கோவை வெள்ளலூர் அடுத்த கஞ்சி கோனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் என்பவரின் மகன் சரவணன் (41). கடந்த ஓராண்டுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் சக்திவேல் (43) என்பவர் அறிமுகமானார்.  சக்திவேல் பொதுப்பணித்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்பதால் அரசு வேலை வாங்கித் தர முடியும் எனவும் கூறியிருக்கிறார். இதை நம்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு தவணைகளாக 13 லட்சம் ரூபாயை சக்திவேல் இடம் கொடுத்துள்ளனர். இதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் நான்கு சீல் வைக்கப்பட்ட கவர்களை சரவணன் இடம் கொடுத்துள்ளார். அதில் நான்கு பேருக்குரிய பணி நியமன ஆணைகள் இருப்பதாகவும் அதனை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.  அவர்கள் பணி நியமன ஆணைகளுடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர். அதனை பரிசோதித்த அதிகாரிகள் அவை போலி பணி நியமன ஆணைகள் என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் போலி நியமன ஆணை கொடுத்த சக்திவேலை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சரவணன் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்