மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக, 'பார்மர்ஸ் ரிஜிட்டரி' என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், 11.8 கோடி விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில், 80 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போர் பெரிய விவசாயிகள் என வேளாண் துறையால் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.