கோவையில், நேற்று இரவு புத்தாண்டு காரணமாக ஓசூர் சாலையில் அ. தி. மு. க அலுவலகம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மது போதையில் இளைஞர்கள் கண்டெய்னர் லாரி மீது ஏறி ஆபத்து உணராமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் கீழே இறங்க மறுத்து, கண்டைனர் லாரியின் பின்புறம் தொங்கியபடி அட்டகாசம் செய்தார். நீ சம்பவம் குறித்து அருகில் புத்தாண்டு பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.