கோவையின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை நேற்று (டிசம்பர் 29) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற, புதிதாக துவங்கும் பணிகளாக கோவை மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் நீண்ட நாளாக சாலைகளை சீரமைக்க கேட்டுக் கொண்டு இருந்த கோரிக்கைகளுக்கு, பல்வேறு தார் சாலைகளை, புதிய தார் சாலைகளாக மாற்றிட 860 கிலோ மீட்டர் அளவிற்கு 415 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விடுபட்ட சாலைகளை புதிதாக தார் சாலைகளாக மாற்றுவதற்கு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்குவதற்கான அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டு உள்ளார். கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான நிதிகளை முதலமைச்சர் நிச்சயம் வழங்குவார் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர் இன்று மட்டும் 30 கோடியே 93 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதாகவும், கோவை மாநகராட்சியின் வரலாற்றில் மூன்றரை ஆண்டுகளில் எவ்வளவு பெரிய நிதி சாலை அமைப்பதற்கும் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது வரலாற்றை இதுவே முதன் முறை. எந்த காலகட்டத்திலும் இது போன்ற நிதி ஒதுக்கப்பட்டது இல்லை என்று கூறினார்.