கோவை: இருசக்கர வாகனம் திருடியவருக்கு தர்ம அடி!

52பார்த்தது
திருச்சி சாலையில் ரெயின்போ காலனியில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு போக முயன்றார். ஆனால் அங்கு இருந்த இளைஞர்கள் கூட்டமாக அந்த மர்ம நபரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி