தினமும் நள்ளிரவிலேயே தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பதால் ஏராளமான பிரச்சனைகள் உண்டாகும். தூக்கம் ஏடாகுடமாக இருந்தால் உடல் எடையும் ஏடாகுடமாக உயரும். நள்ளிரவில் தூங்குவதால் பசியை தூண்டும் Ghrelin ஹோர்மோன் அதிகமாகவும், வயிறு நிறைவை உண்டாக்கும் Leptin ஹோர்மோன் குறைவாகவும் சுரக்கும். இதனால் நள்ளிரவில் அதிக உணவை எடுத்துக்கொள்ள நேரும். இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இதனால் பகல் பொழுதில் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள்.