தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை, காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியை மாதந்தோறும் நடத்தி வருகிறது. வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. காளான் வளர்ப்பு தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்களையும் இந்த பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம். பங்கேற்கும் விருப்பமுள்ளவர்கள் ரூ. 590 (வரி உட்பட) கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 0422-6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ளோர் அனைவரும் பங்கேற்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.