பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெட்டோவா உடன் மோத இருக்கிறார்.