கோயம்புத்தூர் - Coimbatore

கோவை: விபத்து பற்றி மெக்கானிக்கல் காண்ட்ராக்டர் கூறுவது என்ன?

கோவை: விபத்து பற்றி மெக்கானிக்கல் காண்ட்ராக்டர் கூறுவது என்ன?

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்கானிக்கல் காண்ட்ராக்டர் எரிவாயு டேங்கர் லாரியின் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, லாரி ஓட்டுநர் இரவு நேரத்தில் மேம்பாலத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், லாரியில் இருந்த அழுத்தமானி சேதமடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது. இருப்பினும், நிறுவன ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கசிவைத் தடுத்து நிறுத்தினர். 80 முதல் 100 கிலோ எரிவாயு மட்டுமே கசிந்தது. லீக்கேஜ் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது.  சூழலுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார். கவிழ்ந்த லாரியை பிளான்ட்டுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு வைத்து லாரியில் இருந்து எரிவாயு முழுமையாக அகற்றப்படும் என்றும் ராபர்ட் தெரிவித்தார். பொதுவாக டேங்கர் லாரிகள் பைபாஸ் சாலையை பயன்படுத்துவதாகவும், ஓட்டுநர் தவறுதலாக இந்த வழியில் வந்திருக்கலாம் என்றும் ராபர்ட் கூறினார். இது குறித்து ஓட்டுநரிடம் தான் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்