கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாமன்ற உறுப்பினர்கள் கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை காய்கறி மார்க்கெட்டாக மாற்றுவதற்க்கும் , தொழில் வரி என்ற பெயரில் சிறு , குறு வியாபரிகளை துன்புறுத்துவதாகவும் , ட்ரோன் சர்வே என்ற பெயரில் கோவை மக்களை துன்பறுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து வருகின்ற மாமன்ற கூட்டத்தில் இது தொடர்பான பிரச்சனைய எழுப்ப இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.