கோவை: உதவிய அனைவருக்கும் நன்றி - மாவட்ட ஆட்சியர்!

50பார்த்தது
கோவையில், இன்று அதிகாலை நடந்த டேங்கர் லாரி விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவித்தார். 

காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு, சேதமடைந்த லாரியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்காக சேலத்தில் இருந்து சிறப்பு மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டு, லாரியை பீளமேடு டிப்போவுக்கு மாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தொழிற்சாலை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 35 டன் எடையுள்ள கேஸ் நிரப்பப்பட்ட லாரியை அகற்றுவதற்கு தேவையான கிரேன் வாகனத்தை நெடுஞ்சாலைத்துறை வழங்கியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆட்சியர் நன்றி தெரிவித்தார். தற்போது போக்குவரத்து சீராக நடைபெற்று வருவதாகவும், நஞ்சப்பாசாலையில் இருந்து லாரி வெளியே சென்றதும் முழுமையாக சீராகும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி