

ராசிபுரம்
இராசிபுரம்: தை அமாவாசை சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இன்று தை மாதம் அமாவாசை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான காய்கனிகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.