ஆலம்பாளையம்: 520 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பூமி பூஜை

56பார்த்தது
ஆலம்பாளையம்: 520 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பூமி பூஜை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆலம்பாளையம் பேரூராட்சி ஆயக்காட்டூரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 520 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் உடன் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி