
இராசிபுரம்: பாஜக சார்பாக வாஜ்பாய் 100-ஆவது பிறந்த தின விழா
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-ஆவது பிறந்த நாள் விழா, ராசிபுரம் நகர பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டு வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறையும். இதனால், ஊழலற்ற ஆட்சி அமையும். எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது, சிறார்களை தட்டு ஏந்தவிட்டீர்கள் என்று கருணாநிதி கூறினார். பின்னர் அவரே மாணவர்களுக்கு முட்டை வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.