2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "தமிழக பாஜகவிற்கு புது ரத்தம் பாய்ச்சபட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை நோக்கி பாஜக வேகமாக செல்கிறது. பாஜக ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுகிறது" என்று பேட்டியளித்துள்ளார்.