நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயிலில் நாளை தை மாதம் அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு காய், கனிகள், கீரைகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அலங்காரம் என்பதால் அதற்கான முன்னேற்பாடாக இன்று (ஜனவரி 28) காய்,கனிகள் கீரைகளால் பக்தர்கள் கொண்டு வருகின்றனர். மேலும் சிறப்பு மிக்க பூஜையை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் வருகை தரும்படி கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.