திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய டெண்டர் முறையில் நேற்று (ஜனவரி 28) நடந்தது. முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து 153 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்தனர். பிடி ரகம் பருத்தி குவிண்டால் ரூ. 5,499 முதல் ரூ. 7,696 வரை விற்பனையானது. ரூ. 3.15 லட்சத்துக்கு ஏலம் போனது. தொடர்ந்து எள் ஏலம் நடந்தது. விவசாயிகள் 10 மூட்டை எள்ளை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கருப்பு எள் கிலோ ரூ. 109.20 முதல் ரூ. 176 வரை விற்பனையானது. ஒட்டுமொத்தமாக பருத்தி ரூ. 3.15 லட்சத்துக்கும், எள் ரூ. 1 லட்சத்துக்குமாக மொத்தம் ரூ. 4.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.