
நாமக்கல்: பொங்கல் முடிந்தும் பரிசு தொகுப்பு வழங்கப்படும்..அமைச்சர்
ரேஷன் கடைகளில் இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு இன்று (ஜன. 13) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியை இன்றுடன் முடிக்க முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்றும் வாங்காதவர்கள் தொகுப்பை பின்னர் வாங்க முடியாதா என்ற கேள்வி எழுந்தது, இந்நிலையில் இன்று வாங்க முடியாதவர்கள் பொங்கலுக்கு பிறகு பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.