கர்நாடகாவில் மணப்பெண் தேடி வீட்டிற்குச் சென்ற 34 வயது ரியல் எஸ்டேட் முகவரை மிரட்டிய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து ரூ.50,000 பறித்துள்ளது. பெண் பார்ப்பதற்காக ஹெபல் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு அந்நபர் சென்றுள்ளார். அங்கிருந்த விஜயா என்ற பெண், இளைஞரிடம் பேசி அவசர தேவை என கூறி டிஜிட்டல் வழியில் ரூ.1200 பெற்றுள்ளார். பின்னர் வீட்டின் கதவை அடைத்துவிட்டார். உடனே, அங்கு நுழைந்த போலி போலீசார், இளைஞர் விபச்சாரம் செய்வதாக கூறி அறையில் அடைத்து மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.