
பரமத்தி வேலூர்: மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள வில்லிப்பாளையத்தை சேர்ந்த ராஸ் அம்மாள் இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் கதவுகள் உடைந்ததைக் கண்டு அதிர்ந்தார். இவர் வீட்டில் இருந்து சுமார் 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மோதிரம், நகை திருட்டுப் போனதாக தெரிந்தது. இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.