

திருச்செங்கோடு: மாநில அளவிலான கலைத் திருவிழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள KSR கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 11மற்றும் 12-ம் வகுப்பு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேற்று தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், நாடாளுமன்ற உறுப்பினர் வி. எஸ். மாதேஸ்வரன் அவர்கள், திருச்செங்கோடு ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், நகர மன்ற தலைவர் திருமிகு. நளினி சுரேஷ் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.