குமாரபாளையம் - Kumarapalayam

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம்,  லாரி ஓட்டுனர் கைது   குமாரபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில்  லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர்கள்  காளியம்மாள், 52, சுந்தரம்,  (63). காளியம்மாளின் புற்றுநோய் சிகிச்சைகாக, தம்பதியர் இருவரும், மாருதி ஆல்டோ காரில், அதே பகுதியை சேர்ந்த, காத்தவராயன்,  (57), என்ற ஓட்டுனர் காரை ஓட்ட, இருவரும் உட்கார்ந்து சென்றனர். நேற்றுமுன்தினம் காலை 05: 00 மணியளவில், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில், கவுரி தியேட்டர் பின்புறம், ரெட்டியார் டீக்கடை அருகே வந்த போது, முன்னால்  சென்ற லாரி ஓட்டுனர்  திடீரென்று எவ்வித சிக்னல் செய்யாமல் லாரியை திருப்ப, வேகமாக வந்த கார், லாரியின் மீது மோதியதில், தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து, லாரி ஓட்டுனர் கோவையை சேர்ந்த முருகன்,  (31), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా