மதுரை நகரம் |

இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த பெண் காவல் ஆய்வாளர்

2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெயமணி சாக்லேட்களை கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு சாக்லெட்டுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பெண் காவல் ஆய்வாளர் ஜெயமணி கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு இருங்கள் உலகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என ஒவ்வொரு பக்தர்களுக்கும் கூறி வாழ்த்துதெரிவித்தார். தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்களுக்கும் கோவில் பணியாளர்களுக்கும் சாக்லேட்டை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு நாளில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பெண் காவல் ஆய்வாளர் சாக்லேட் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோஸ்


தமிழ் நாடு
அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்ட பும்ரா
Jan 01, 2025, 09:01 IST/

அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்ட பும்ரா

Jan 01, 2025, 09:01 IST
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை வரலாற்றில் அதிக புள்ளிகள் (907) பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜாஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். கடந்த 2016-ல்  சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 904 புள்ளிகள் பெற்றதே இந்திய பவுலர் பெற்ற அதிக புள்ளிகளாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய பும்ரா, முதலில் அஸ்வினின் சாதனையை சமன் செய்த நிலையில் தற்போது அதனை முறியடித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து குறிப்பிடத்தக்கது.