கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி(வீடியோ)

78பார்த்தது
புத்தாண்டு நாளில் கோயிலுக்கு சென்றவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கங்காபூரில் உள்ள அக்கல்கோட் சுவாமி கோயிலுக்கு சிலர் காரில் சென்றுள்ளனர். அவர்களது கார் சோலாப்பூர் - அக்கல்கோட் சாலையில் மைந்தர்கி கிராமத்திற்கு அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி