இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் கட்சியின் 24வது தமிழ் மாநில மாநாடு வருகிற ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது. அதனையொட்டி மதுரை வில்லாபுரத்தில் தோழர் தியாகிகளை நினைவுகூர்ந்து கொடிப்பயணம் துவக்க நிகழ்ச்சி நேற்று (டிச. 31) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, லெனின் தலைமை வகித்தார். பாண்டிய ராஜன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார். திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர்கள் கணேசன், மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாயி விஜயராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகளைத் தந்த கட்சி. நாட்டிற்காக இரத்தத்தை சிந்தியவர்கள், குண்டடிபட்டு, சமுக போராட்டத்தில் தனது உயிரை தந்தவர்கள். அவர்களின் வழியில் தியாகி லீலாவதி சமூக வீரோதிகளின் தாக்குதலில் தனது குருதி சிந்தி உயிரை இழந்தார். இந்த மண்ணிலிருந்து கொடிப்பயணம் துவங்குகிறது" என பேசினார்.