திருச்சி: துறையூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலனின் நண்பரான மூர்த்தி என்பவரிடம் அவர் உதவி கேட்டுள்ளார். அப்போது மூர்த்தி அப்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பெண்ணின் காதலரிடம் குடிபோதையில் இருந்த மூர்த்தி உளறியுள்ளார். பின்னர் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த விஷயம் தெரிந்ததால், டிச.21 அன்று துறையூர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.