கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலிநிவாரணியான Nimesulide (நிம்சுலைடு) என்ற மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு, அவற்றின் உடலை உண்ணும் ‘பாறு கழுகுகள்' கடுமையாக பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990களில் நாட்டில் 5 கோடியாக இருந்த இந்த இன கழுகுகள், தற்போது 300 அளவிலேயே உயிர் வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.