அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்ட பும்ரா

82பார்த்தது
அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்ட பும்ரா
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் அதிக புள்ளிகள் (907) பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜாஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். 2016-ல் ஸ்பின் பவுலர் அஸ்வின் 904 புள்ளிகள் பெற்றதே இந்திய பவுலர் பெற்ற அதிக புள்ளிகளாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிவரும் பும்ரா, முதலில் அஸ்வினின் சாதனையை சமன் செய்த நிலையில் தற்போது அதனை முறியடித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி