'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. 'விடாமுயற்சி' படம் பின்வாங்கியதை அடுத்து சிறிய படங்கள் சில பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள நடிகர் ஷேன் நிகேம் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’, நடிகர் சிபி சத்யராஜ் நடித்த, ‘10 ஹவர்ஸ்’ (10 hours) படங்கள் வெளியாகின்றன. இதைத்தவிர மேலும் சில படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.