மதுரை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

67பார்த்தது
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினர். அதிகாலை 5 மணியில் இருந்தே புத்தாடை அணிந்துவந்த பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று அறுபடை வீடுகளான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், பூங்கா முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பொதுமக்கள் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி