கடற்கரை மணவில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறிய ஃபெர்ராரி கார் மாட்டு வண்டி மூலம் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ரேவண்டா கடற்கரைக்கு மும்பையைச் சேர்ந்த சிலர் விலையுயர்ந்த ஃபெர்ராரி சொகுசு காரில் வந்துள்ளனர். அவர்கள் காரை கடற்கரையில் ஓட்டிச் சென்றபோது, அது மண்ணில் சிக்கிக்கொண்டது. பலமுறை முயற்சித்தும் கார் நகராததால், மாட்டுவண்டியில் கயிற்றை கட்டி காரை இழுத்துச் சென்று சாலையில் விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.