அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 2025-26ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது தொடர்பாசு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.