செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே மல்ரோசாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரி முன்பு தவெக சார்பில் அண்மையில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிழற்குடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.