தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி அக்டோபரில் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். விஜய்க்கு உலகில் பல நாடுகளில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தவெக-வின் கொடியை பட்டம் போல தயார் செய்த விஜய் ரசிகர்கள் அதை பறக்கவிட்டனர். அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.