பூமி பூஜையின்போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப் பணி தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம். வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து நாட்கள் வருகின்றன. ஒரு வருடத்தில் 8 வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். ஜனவரி - 25, மார்ச் - 6, ஏப்ரல் - 23, ஜூன் - 4, ஜூலை 27, ஆகஸ்ட் - 22, அக்டோபர் - 28, நவம்பர் - 24.