சூளகிரி அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பெரிய கடவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (21). இவர் கடந்த 11-ம் தேதி அன்று சூளகிரியில தனியார் தங்கும் விடுதி முன்பு தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட டூவீலரின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து நேற்று முன்தினம் (செப்-14) நாகராஜ் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.