வேப்பனஹள்ளி - Veppanahalli

மாமியாரை இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகன்.. பரபரப்பு

மாமியாரை இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகன்.. பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36) காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ஹர்ஷிதா (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்டுகிறது. இதன் காரணமாக ஹர்ஷிதா கோபித்துக்கொண்டு சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் (செப்-13) மாலை, சூளகிரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டபோது வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி ஹர்ஷிதா, மாமனார் பரசுராமன், மாமியார் தாட்சாயணி உள்ளிட்ட 4 பேரை இரும்புக்கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஹர்ஷிதா, கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
Sep 15, 2024, 01:09 IST/பர்கூர்
பர்கூர்

தொலைந்து விட்ட பர்ஸை உரியவரிடம் ஒப்படைத் ஆட்டோ ஓட்டுனர்கள்.

Sep 15, 2024, 01:09 IST
கிருஷ்ணகிரி நகர புதிய பேருந்து நிலையத்திற்கு சூளகிரியில் இருந்து அமிர்தா என்ற பெண்மணி கிருஷ்ணகிரிக்கு வந்து தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் நேற்று(செப்-14)ஏறும் போது கையில் வைத்திருந்த பர்ஸை தவற விட்டுவிட்டார். பிறகு அந்த பெண்மணி பல இடத்தில் தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் சர்தார் மற்றும் சலீம் இவர்கள் கைக்கு அந்த பர்ஸ் கிடைத்தது. அவர்கள் தொலைபேசி எண்ணை கண்டு பிடித்து போனில் தொடர்புக்கொண்டுஇ துகுறித்து தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அமிர்தா பர்ஸையும் அதிலிருந்த பணம் மற்றும் அடையாள அட்டை மற்றும் இதர பில்கள் பணம் மற்றும் ரசீதுகள் சரியாக உள்ளது. என்று கூறினார் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அமிர்தா ஆட்டோ டிரைவர்களுக்கு மனமகிழ்ச்சி தெரிவித்து தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்