கெலமங்கலம்: பெண் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள டி. கொத்தனூரை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. இவருடைய மகள் சோனியா (23) இவருக்கும், பேவநத்தம் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 2 அரை வயதில் ஆண் குழந்தை உள்ளநிலையில் கணவன், மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஆயுத பூஜைக்காக தனது கணவருடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சோனியா சென்று சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கெலமங்கலம் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய் ததால் ஓசூர் சப்-கலெக்டர் விசாரித்து மெற்கொண்டு வருகிறார்.