கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. குழந்தையின் பாத சுவடுகளை வாசலில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைந்தும், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல் வேடமிட்டும் விழாவை கொண்டாடினர். மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை வைத்தும் பூஜைகள் செய்தும் வணங்கினர்.